ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) மற்றும் ஜனாதிபதி அநுர குமர திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இன்று (மார்ச் 19) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பு குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் அதன் விளைவாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமர திஸாநாயக்க அமெரிக்க பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, மேலதிக செயலாளர் ரொஷான் கமகே மற்றும் செர்ஜியோ கோரின் தூதுக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
