Headlines

அரச கொடுப்பனவுகள் டிஜிட்டல் மயம்; ஒன்லைன் கட்டணங்களுக்கு சேவைக் கட்டணம் ரத்து

(பி.ப. 03:12) அரச சேவைகளில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது வெளியிட்டுள்ளார்.

“அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் (All government payments) ஒரே டிஜிட்டல் கொடுப்பனவு அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும்,” என ஜனாதிபதி அறிவித்தார்.

மேலும், “இந்த டிஜிட்டல் முறைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒன்லைன் கொடுப்பனவுகளுக்கு எவ்வித சேவைக் கட்டணங்களும் (No service charges) அறவிடப்பட மாட்டாது,” என்றும் அவர் உறுதியளித்தார். இந்த நடவடிக்கை, பணப் பாவனையைக் குறைத்து, செயற்திறனை அதிகரிப்பதுடன், பொதுமக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *