Headlines

அரசுப் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு: இரண்டாம் தவணை ஏப்ரல் 20 இல் ஆரம்பம்

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (10) நிறைவடைவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

அதற்கமைய, இரண்டாம் பாடசாலைத் தவணை ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *