Headlines

இந்திய பாதீடு 2026: இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய் நிதியுதவி அறிவிப்பு

புது தில்லி: இந்தியாவின் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பாதீட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்தப் பாதீட்டில், இலங்கைக்கு உதவியாக 4 பில்லியன் இந்திய ரூபாயை வழங்க இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்தத் தொகையானது 2025 ஆம் ஆண்டை விட 1 பில்லியன் ரூபாய் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதார நிலை: இதேவேளை, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.4 சதவீத வளர்ச்சியடையும் என்றும், பணவீக்கம் கிட்டத்தட்ட 2 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *