Headlines

இலங்கைப் பிரஜை அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து!இலங்கை அரசாங்கத்தின் தீவிர இராஜதந்திர முயற்சிக்குக் கிடைத்த வெற்றி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் நேற்று (13) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தகவலை இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தனது முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, “இந்தத் தீர்ப்பு அனோஜன் சிவராசாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய நிவாரணமாகும்” எனக் குறிப்பிட்டதுடன், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட பிரதியமைச்சர், சவூதிக்கான இலங்கைத் தூதுவர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இந்த வழக்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இலங்கை மற்றும் சவூதி சட்டக் குழுவினருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *