Headlines

ஈரானில் பல வார கால தரைவழி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அமெரிக்கா; வாஷிங்டன் போஸ்ட் செய்தி

வாஷிங்டன், மார்ச் 29, 2026: ஈரானில் பல வாரங்கள் நீடிக்கக்கூடிய தரைவழித் தாக்குதல்களுக்கு அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சனிக்கிழமை இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டங்களில் சிறப்புப் படைப் பிரிவுகள் (Special Operations) மற்றும் காலாட்படை வீரர்களின் திடீர்த்தாக்குதல்கள் (Raids) இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் திட்டங்களுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளிப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை என ‘வாஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்துள்ளது.

ஈரானுடனான போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், மத்திய கிழக்குப் பகுதிக்கு அமெரிக்க ‘மரைன்’ (U.S. Marines) வீரர்களை ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே அனுப்பியுள்ளது. மேலும், அமெரிக்க ராணுவத்தின் 82வது வான்வழிப் படைப் பிரிவைச் (82nd Airborne) சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களையும் அங்கு அனுப்பத் திட்டமிட்டு வருவதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *