Headlines

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்: நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (04) இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார் என அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.

அறிக்கைகளின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, அவர் சற்று நேரத்திற்கு முன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *