கண்டி, நவம்பர் 27: நிலவும் மோசமான வானிலை நிலையைக் கருத்தில் கொண்டு கண்டி மாவட்டத்திற்கு அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சமீபத்திய நாட்களில் பெய்த கனமழையினால் கண்டி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் பல மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
