காலி தேசிய மருத்துவமனையில் தற்போது இரண்டு மொபைல் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை, இலங்கையிலுள்ள ஈரானியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை காலி தலைமை நீதவான் சமீரா தொடாங்கொட இன்று (11) காலை பிறப்பித்தார்.
அதன்படி, மாலுமிகளின் உடல்களை ஈரானியத் தூதரகப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்குமாறு மருத்துவமனையின் பணிப்பாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
காலி துறைமுகப் பொலிஸார் காலி நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையினைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
