Headlines

கொழும்பு – 2026 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (நவம்பர் 07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளார்.

அதன்படி, ஜனவரி 01, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான காலப்பகுதிக்கான மொத்த அரசாங்கச் செலவினம் 4,434 பில்லியன் ரூபாவாக (ரூ. 4,434,000,000,000) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணவீக்கத்தை 5 வீதத்துக்கும் குறைவாக வைத்திருப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி தனது பாதீட்டு உரையில் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலையான மட்டத்தில் இருப்பதாகவும், ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் ஆகிய இரண்டும் வலுவான நிலையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *