கொழும்பு: சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதன் ஊடாக, இதுவரை எட்டப்படாத முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (02) வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு சட்டத்தின் ஆட்சி இன்றியமையாதது,” என்று அந்தச் செய்தியில் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டின் தற்போதைய சூழ்நிலையானது, பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாசாரத் துறைகளில் இலங்கை பெரிதாக எதனையும் சாதிக்கத் தவறிவிட்டதையே சுட்டிக்காட்டுகிறது,” என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
