Headlines

டெல்லியில் ஜனாதிபதி அநுரவுடன் ட்ரம்பின் விசேட பிரதிநிதி சந்திப்பு!

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) இன்று (18) காலை டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI இம்பாக்ட் உச்சிமாநாடு 2026’ (AI Impact Summit 2026) நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தற்போது புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *