வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக்காலத்தில் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, ட்ரம்பின் வெளிநாட்டுக் கொள்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் (IEEPA) பயன்படுத்தி வரிகளை விதித்த ட்ரம்பின் வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், “வரிகளை விதிக்கும் அதிகாரம் அமெரிக்க காங்கிரஸின் (பாராளுமன்றம்) முக்கிய அதிகாரமாகும், ஜனாதிபதியின் அதிகாரமல்ல,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு, ட்ரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக, அக்டோபர் 14ஆம் திகதி வரை நடைமுறைக்கு வராது. சீனா, மெக்சிகோ, கனடா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தத் தீர்ப்பு பாதிக்கும் என்றாலும், உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வரிகளைப் பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.