Headlines

தரம் 1 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆரம்பித்து வைத்தார்

(அத்துருகிரிய) – பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரிணி அமரசூரிய, தரம் 1 மாணவர்களுக்கான தேசிய கல்விச் சீர்திருத்தங்களை இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அத்துருகிரியவில் அமைந்துள்ள குணசேகர வித்தியாலயத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போதே அவர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இலங்கையின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய மாற்றங்களின் ஒரு பகுதியாக, தரம் 1 மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் புதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத் தலைமுறையினரை நவீன உலகுக்கு ஏற்றவாறு தயார்படுத்தும் நோக்கில் இந்தச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *