2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை பார்வையிடுவது எப்படி?
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற முகவரிக்குச் சென்று பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்!
வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு (Cut-off marks) மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை புள்ளிவிவரங்கள்:
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மொத்தமாக 294,132 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
