ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி அறிவித்துள்ளார்.
“இரண்டு வார காலத்திற்கு, ஹோர்முஸ் நீர்சந்தி வழியாக பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது “ஈரானின் ஆயுதப் படைகளுடனான ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு நடைபெறும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
