கடற்கரை பாதுகாப்பு சட்டங்களை மீறி, கடந்த 2025 நவம்பர் 16 ஆம் திகதி திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையொன்றை நிறுவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவத்தில், வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் வேறு ஆறு பேர் எதிர்வரும் 2026 பெப்ரவரி 09 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
