மேல், மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குப் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (15) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (16) காலை 08.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறிப்பிடப்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
