Headlines

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கொழும்பு, நவம்பர் 11: இன்று (நவம்பர் 11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யலாம்.

அதேவேளையில், மேற்கு, தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *