Headlines

நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையானார் முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் இன்று (27) காலை 8:45 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாகவே அவர் அங்கு சமூகமளித்துள்ளார்.

குறித்த விசாரணை தொடர்பாக அவரிடம் நீண்டநேர வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விபரங்களை எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *