(பி.ப. 02:22) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பாதீட்டு உரையில், நாட்டின் நிர்வாக மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்தார்.
“நீதிச் சேவைக்காக ஒரு புதிய நெறிமுறைக் கோவையை (Code of Ethics) வரைவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும்” என ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நடவடிக்கை நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, “2026 ஆம் ஆண்டில் இலங்கையில் ‘டிஜிட்டல் சொத்துக்கள் அமைப்பு’ (Digital Assets System) அறிமுகப்படுத்தப்படும்” என்றும் அவர் தனது உரையில் உறுதியளித்தார். இது நாட்டின் நிதி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
