Headlines

புதுடெல்லியில் ஜனாதிபதி அநுர – பிரேசில் ஜனாதிபதி லூலா ட சில்வா இடையே இருதரப்புச் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா ட சில்வா (Lula da Silva) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று (19) பிற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI இம்பாக்ட் 2026’ (AI Impact 2026) உச்சிமாநாட்டின் பக்க அம்சமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதேவேளை, இந்த உச்சிமாநாட்டின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சேர்பிய ஜனாதிபதி அலெக்ஸ்சாண்டர் வுசிக் (Aleksandar Vučić) மற்றும் ஸ்லோவாக் குடியரசின் ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி (Peter Pellegrini) ஆகியோருடனும் தொடர்பாடல்களை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *