Headlines

புத்தாண்டு: இன்றும் விசேட பஸ், ரயில் சேவைகள்! அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக இன்றும் (12) விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பஸ்களை ஈடுபடுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைப் பயணிகளுக்காக மாக்கும்புர பன்முக போக்குவரத்து மத்தியஸ்தத்தில் (MMC) இருந்தும் விசேட பஸ் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *