Headlines

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

கொழும்பு, நவம்பர் 12: முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC – Commission to Investigate Allegations of Bribery or Corruption) கைது

இன்று காலை (நவம்பர் 12) வாக்குமூலம் வழங்குவதற்காக லஞ்ச ஆணைக்குழுவுக்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு (SLIC – Sri Lanka Insurance Corporation) 4.7 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் நேரடி மருத்துவ காப்பீட்டுக்கு ஒரு தனியார் தரகு நிறுவனத்தை சட்டவிரோதமாக நியமித்ததன் மூலம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு 4,750,828.72 ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *