Headlines

மேல், சபரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும்: வானிலை நிலையம்

இன்று (23) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

அதிகாலை வேளையில் மேல், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலைமையை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *