கொழும்பு, பிப். 28: லாஃ ப்ஸ் காஸ் பிஎல்சி (Laugfs Gas PLC) நிறுவனம், புதிய எல்பி (LP) எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
எரிவாயுவின் நிலையான விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, நாட்டை வந்தடைந்த எரிவாயு இருப்புகளை இன்றிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, உள்நாட்டு நுகர்வோர் தமக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை அங்கீகரிக்கப்பட்ட லாஃ ப்ஸ் எரிவாயு விற்பனையாளர்கள் (authorized Laugfs Gas dealers) ஊடாக, வழக்கம் போல் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
