கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, சற்று முன்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) வருகை தந்துள்ளார்.
‘சிரிலிய’ (Siriliya) நிதியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 2026 ஜனவரி 27 ஆம் திகதி அவர் FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது எனத் தனது சட்டத்தரணி ஊடாகத் தெரிவித்த அவர், இரண்டு வார கால அவகாசமும் கோரியிருந்தார்.
இருப்பினும், அவரை இன்று (03) காலை FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
