அனுராதபுரி புனித தல அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
முன்னதாக, குறித்த திட்டத்துக்கு எதிராக ருவன்வெலி மகா சேயவுக்கு அருகிலுள்ள அன்னதான வளாகத்தில் பௌத்த பிக்குகள் குழுவொன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கஸ்ஸப தேரரும் மேலும் இரண்டு பிக்குகளும் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து தமது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
