பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMA) உள்ளிட்ட பல புகையிரத தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று (18) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்ததாக SLRSMA இன் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.
புகையிரத பொது முகாமையாளரை அவரது பதவியிலிருந்து நீக்க அதிகாரிகள் தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சங்கங்கள் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
