Headlines

இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ!

முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவருடன் அவரது உறவினர் ஒருவரும் இணைந்து பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 1:10 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ469 என்ற விமானத்தில் அவர்கள் இருவரும் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

திடீர் சுகவீனம் அடைந்திருந்த முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று அதிகாலை சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *