இலங்கையின் பல பகுதிகளில் இன்று (நவம்பர் 05) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாகப் பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை பெய்யக் கூடிய பகுதிகள்:
- மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- இதனிடையே, கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் லேசான மழ பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
- மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனித் தன்மையும் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்த்துக்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
