Headlines

ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (04) காலை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

போல்கொல்லவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்திற்கு ஆசனங்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணையே இதுவாகும். அங்கு ஆசனங்களைக் கொள்வனவு செய்யும் போது, உரிய கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், இதனால் அரசாங்கத்திற்கு ரூ. 7,973,114 நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்ற ஒழுங்கீனங்கள் மற்றும் அதன் விளைவாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரணை கவனம் செலுத்துவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதாக CIABOC குறிப்பிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *