இலங்கையின் எட்டு மாவட்டங்களில் நிலவும் ‘எல் நினோ’ (El Nino) காலநிலை காரணமாக 49,344 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் (DMC) இன்று (12) காலை வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் (DSDs) இந்த ‘எல் நினோ’ காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குத் தொடர்ச்சியாக சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, பாதிக்கப்பட்ட குறித்த 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 141,312 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
