Headlines

ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் 2027 உலகக் கிண்ணத் தொடர்: அணிகள் மற்றும் அட்டவணை விபரங்கள்.

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி நமீபியாவின் விண்ட்ஹோக் (Windhoek) நகரில் மூன்று அணிகளுக்கு இடையிலான ‘சுப்பர் சீரிஸ்’ (Super Series) போட்டிகளுடன் இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ள 10 அணிகள் மற்றும் தகுதிப் போட்டிகள் மூலம் தெரிவாகும் அணிகள் உள்ளடங்கலாக 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுநிலைப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

  • குழு A: இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே மற்றும் தகுதிபெறும் அணி A
  • குழு B: நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் தகுதிபெறும் அணி B

குழுநிலைப் போட்டிகள் ஒக்டோபர் 7 ஆம் திகதி கேப் டவுனில் (Cape Town) ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் அவுஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 10 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. அதேவேளை, இலங்கை அணி ஒக்டோபர் 13 ஆம் திகதி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

இம்முறைப் போட்டிகள் புதிய வடிவில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும். ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் இரண்டு குழுக்களிலும் நான்காம் இடத்தைப் பிடிக்கும் அணிகளில் சிறந்த புள்ளிகளைப் பெறும் ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் ‘சுப்பர் 7’ (Super 7) சுற்றுக்கு முன்னேறும். ஒக்டோபர் 25 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும் இந்தச் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 6 போட்டிகளில் விளையாடும். குழுநிலைப் புள்ளிகள் இச்சுற்றுக்குக் கொண்டுவரப்பட மாட்டாது.

சுப்பர் 7 சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகும். நவம்பர் 17 ஆம் திகதி கேப் டவுனிலும், நவம்பர் 18 ஆம் திகதி ஸ்வானேயிலும் (Tshwane) அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதன் பிரம்மாண்ட இறுதிப் போட்டி நவம்பர் 21 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளதுடன், மழை காரணமாகப் போட்டி தடைப்பட்டால் மேலதிக நாளும் (Reserve day) ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் உள்ள 12 மைதானங்களில் இந்த உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளதுடன், போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

முழுமையான போட்டி விபரங்கள் வருமாறு:

சூப்பர் சீரிஸ் (Super Series)

  • சனிக்கிழமை, 2 ஒக்டோபர் 2027 – QF1 எதிராக QF3 – விண்ட்ஹோக்
  • திங்கட்கிழமை, 4 ஒக்டோபர் 2027 – QF1 எதிராக QF2 – விண்ட்ஹோக்
  • புதன்கிழமை, 6 ஒக்டோபர் 2027 – QF2 எதிராக QF3 – விண்ட்ஹோக்

(குறிப்பு: இந்தச் சுற்றின் முடிவில் முதலிடம் பெறும் அணி குழுநிலைக்குத் தகுதி பெறும்)

குழுநிலை ஆட்டங்கள் (Group Stage)

  • வியாழக்கிழமை, 7 ஒக்டோபர் 2027 – இந்தியா எதிராக அவுஸ்திரேலியா – கேப் டவுன்
  • வெள்ளிக்கிழமை, 8 ஒக்டோபர் 2027 – பாகிஸ்தான் எதிராக ஆப்கானிஸ்தான் – ஸ்வானே
  • வெள்ளிக்கிழமை, 8 ஒக்டோபர் 2027 – இங்கிலாந்து எதிராக பங்களாதேஷ் – விண்ட்ஹோக்
  • சனிக்கிழமை, 9 ஒக்டோபர் 2027 – சிம்பாப்வே எதிராக தகுதிபெறும் அணி A – புலவாயோ
  • சனிக்கிழமை, 9 ஒக்டோபர் 2027 – தென்னாபிரிக்கா எதிராக நியூசிலாந்து – கேப் டவுன்
  • ஞாயிற்றுக்கிழமை, 10 ஒக்டோபர் 2027 – இந்தியா எதிராக பாகிஸ்தான் – ஜோகன்னஸ்பர்க்
  • ஞாயிற்றுக்கிழமை, 10 ஒக்டோபர் 2027 – இலங்கை எதிராக தகுதிபெறும் அணி B – விண்ட்ஹோக்
  • திங்கட்கிழமை, 11 ஒக்டோபர் 2027 – சிம்பாப்வே எதிராக ஆப்கானிஸ்தான் – புலவாயோ
  • செவ்வாய்க்கிழமை, 12 ஒக்டோபர் 2027 – அவுஸ்திரேலியா எதிராக தகுதிபெறும் அணி A – பார்ல்
  • செவ்வாய்க்கிழமை, 12 ஒக்டோபர் 2027 – நியூசிலாந்து எதிராக பங்களாதேஷ் – குகொம்போ சிட்டி
  • புதன்கிழமை, 13 ஒக்டோபர் 2027 – இங்கிலாந்து எதிராக இலங்கை – விண்ட்ஹோக்
  • புதன்கிழமை, 13 ஒக்டோபர் 2027 – தென்னாபிரிக்கா எதிராக தகுதிபெறும் அணி B – பார்ல்
  • வியாழக்கிழமை, 14 ஒக்டோபர் 2027 – இந்தியா எதிராக ஆப்கானிஸ்தான் – ஸ்வானே
  • வெள்ளிக்கிழமை, 15 ஒக்டோபர் 2027 – பாகிஸ்தான் எதிராக தகுதிபெறும் அணி A – புளூம்பொன்டெய்ன்
  • வெள்ளிக்கிழமை, 15 ஒக்டோபர் 2027 – சிம்பாப்வே எதிராக அவுஸ்திரேலியா – ஹராரே
  • சனிக்கிழமை, 16 ஒக்டோபர் 2027 – இலங்கை எதிராக பங்களாதேஷ் – டர்பன்
  • சனிக்கிழமை, 16 ஒக்டோபர் 2027 – தென்னாபிரிக்கா எதிராக இங்கிலாந்து – கெபெர்ஹா
  • ஞாயிற்றுக்கிழமை, 17 ஒக்டோபர் 2027 – இந்தியா எதிராக தகுதிபெறும் அணி A – புளூம்பொன்டெய்ன்
  • ஞாயிற்றுக்கிழமை, 17 ஒக்டோபர் 2027 – நியூசிலாந்து எதிராக தகுதிபெறும் அணி B – ஹராரே
  • திங்கட்கிழமை, 18 ஒக்டோபர் 2027 – அவுஸ்திரேலியா எதிராக ஆப்கானிஸ்தான் – குகொம்போ சிட்டி
  • செவ்வாய்க்கிழமை, 19 ஒக்டோபர் 2027 – சிம்பாப்வே எதிராக பாகிஸ்தான் – ஹராரே
  • செவ்வாய்க்கிழமை, 19 ஒக்டோபர் 2027 – தென்னாபிரிக்கா எதிராக பங்களாதேஷ் – டர்பன்
  • புதன்கிழமை, 20 ஒக்டோபர் 2027 – நியூசிலாந்து எதிராக இலங்கை – ஜோகன்னஸ்பர்க்
  • புதன்கிழமை, 20 ஒக்டோபர் 2027 – இங்கிலாந்து எதிராக தகுதிபெறும் அணி B – ஹராரே
  • வியாழக்கிழமை, 21 ஒக்டோபர் 2027 – ஆப்கானிஸ்தான் எதிராக தகுதிபெறும் அணி A – குகொம்போ சிட்டி
  • வெள்ளிக்கிழமை, 22 ஒக்டோபர் 2027 – அவுஸ்திரேலியா எதிராக பாகிஸ்தான் – பார்ல்
  • வெள்ளிக்கிழமை, 22 ஒக்டோபர் 2027 – தென்னாபிரிக்கா எதிராக இலங்கை – ஜோகன்னஸ்பர்க்
  • சனிக்கிழமை, 23 ஒக்டோபர் 2027 – இங்கிலாந்து எதிராக நியூசிலாந்து – கெபெர்ஹா
  • சனிக்கிழமை, 23 ஒக்டோபர் 2027 – பங்களாதேஷ் எதிராக தகுதிபெறும் அணி B – ஸ்வானே
  • ஞாயிற்றுக்கிழமை, 24 ஒக்டோபர் 2027 – சிம்பாப்வே எதிராக இந்தியா – விக்டோரியா ஃபால்ஸ்

சூப்பர் 7 சுற்று (Super 7 Stage)

(அடைப்புக்குறிக்குள் இருப்பது தற்போது தரவரிசைப்படுத்தப்பட்ட அணிகள். ஒருவேளை தரவரிசைப்படுத்தப்படாத அணி தகுதி பெற்றால், அது வெளியேறும் தரவரிசை அணியின் இடத்தை எடுத்துக் கொள்ளும்)

  • திங்கட்கிழமை, 25 நவம்பர் 2027 – A2 (அவுஸ்திரேலியா) எதிராக B3 (இலங்கை) – ஜோகன்னஸ்பர்க்
  • செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2027 – B1 (நியூசிலாந்து) எதிராக A3 (பாகிஸ்தான்) – கெபெர்ஹா
  • புதன்கிழமை, 27 நவம்பர் 2027 – B2 (தென்னாபிரிக்கா) எதிராக AB4 (இங்கிலாந்து) – ஸ்வானே
  • வியாழக்கிழமை, 28 நவம்பர் 2027 – A1 (இந்தியா) எதிராக A2 (அவுஸ்திரேலியா) – விக்டோரியா ஃபால்ஸ்
  • வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2027 – B1 (நியூசிலாந்து) எதிராக B3 (இலங்கை) – குகொம்போ சிட்டி
  • சனிக்கிழமை, 30 நவம்பர் 2027 – A3 (பாகிஸ்தான்) எதிராக AB4 (இங்கிலாந்து) – விக்டோரியா ஃபால்ஸ்
  • ஞாயிற்றுக்கிழமை, 31 நவம்பர் 2027 – B2 (தென்னாபிரிக்கா) எதிராக A1 (இந்தியா) – ஜோகன்னஸ்பர்க்
  • திங்கட்கிழமை, 1 நவம்பர் 2027 – A2 (அவுஸ்திரேலியா) எதிராக B1 (நியூசிலாந்து) – விக்டோரியா ஃபால்ஸ்
  • செவ்வாய்க்கிழமை, 2 நவம்பர் 2027 – B3 (இலங்கை) எதிராக AB4 (இங்கிலாந்து) – கேப் டவுன்
  • புதன்கிழமை, 3 நவம்பர் 2027 – B2 (தென்னாபிரிக்கா) எதிராக A3 (பாகிஸ்தான்) – டர்பன்
  • வியாழக்கிழமை, 4 நவம்பர் 2027 – A1 (இந்தியா) எதிராக B1 (நியூசிலாந்து) – பார்ல்
  • வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2027 – A2 (அவுஸ்திரேலியா) எதிராக AB4 (இங்கிலாந்து) – டர்பன்
  • சனிக்கிழமை, 6 நவம்பர் 2027 – B2 (தென்னாபிரிக்கா) எதிராக B3 (இலங்கை) – புளூம்பொன்டெய்ன்
  • ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2027 – A1 (இந்தியா) எதிராக A3 (பாகிஸ்தான்) – கேப் டவுன்
  • திங்கட்கிழமை, 8 நவம்பர் 2027 – B1 (நியூசிலாந்து) எதிராக AB4 (இங்கிலாந்து) – டர்பன்
  • செவ்வாய்க்கிழமை, 9 நவம்பர் 2027 – B2 (தென்னாபிரிக்கா) எதிராக A2 (அவுஸ்திரேலியா) – கெபெர்ஹா
  • புதன்கிழமை, 10 நவம்பர் 2027 – A3 (பாகிஸ்தான்) எதிராக B3 (இலங்கை) – புளூம்பொன்டெய்ன்
  • வியாழக்கிழமை, 11 நவம்பர் 2027 – A1 (இந்தியா) எதிராக AB4 (இங்கிலாந்து) – கெபெர்ஹா
  • வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2027 – B2 (தென்னாபிரிக்கா) எதிராக B1 (நியூசிலாந்து) – கேப் டவுன்
  • சனிக்கிழமை, 13 நவம்பர் 2027 – A2 (அவுஸ்திரேலியா) எதிராக A3 (பாகிஸ்தான்) – புளூம்பொன்டெய்ன்
  • ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2027 – A1 (இந்தியா) எதிராக B3 (இலங்கை) – டர்பன்

அரையிறுதிப் போட்டிகள் (Semi Finals)

  • புதன்கிழமை, 17 நவம்பர் 2027 – அரையிறுதி 1 – கேப் டவுன்
  • வியாழக்கிழமை, 18 நவம்பர் 2027 – அரையிறுதி 2 – ஸ்வானே

இறுதிப் போட்டி (Final)

  • ஞாயிற்றுக்கிழமை, 21 நவம்பர் 2027 – இறுதிப் போட்டி – ஜோகன்னஸ்பர்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *