Headlines

கொழும்பு மேல் நீதிமன்றில் ராஜித சேனாரத்னவின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!

2012 ஆம் ஆண்டில் முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தைத் தனியார் நிறுவனமொன்றுக்குக் குத்தகைக்கு வழங்கியதன் ஊடாக, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (14) மேலதிக விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, முறைப்பாட்டுத் தரப்பினால் ஆஜர்ப்படுத்தப்பட்ட சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளினால் குறுக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *