பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய கலேகொடஅத்தே ஞானசார தேரர் நாளை (அக்டோபர் 24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார் என பௌத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட சிறைச்சாலை ஒழுங்கு விதிகளுக்கு இணங்க, ஞானசார தேரர் பௌத்த துறவி உடைகளுடன் (சீவரத்துடன்) நாளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஆஜர்படுத்தப்படவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இது குறித்து ‘ஆடா தெரண’ ஊடகத்திற்குக் கருத்துத் தெரிவித்த கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்க, பூஜ்ய பேராசிரியர் கொட்டப்பிட்டிய ராகுல தேரர், ஞானசார தேரரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தேவையில்லை எனப் பௌத்த சாசன அமைச்சு சங்க சபையின் மகாநாயக்க அதிபரிடம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, ஞானசார தேரரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது அவசியமில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதனை அடுத்து, அது குறித்து மகாநாயக்க தேரருக்கு உடனடியாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
