Headlines

நாடு முழுவதும் 1,000 புதிய ‘ஆரோக்ய’ நிலையங்கள்: சுகாதாரத்துறையில் அதிரடி சீர்திருத்தம்!

இலங்கையில் நோயாளர்கள் வைத்தியசாலைகள் மற்றும் விசேட வைத்தியர்களை அணுகும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில், புதிய ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு முறைமையொன்றை (primary healthcare-based system) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தின் கீழ், நோயாளர்கள் ஒவ்வொரு மருத்துவத் தேவைக்கும் தாமாகவே எந்த வைத்தியசாலைக்கு அல்லது விசேட வைத்தியரிடம் செல்வது என்பதை நேரடியாகத் தீர்மானிக்க முடியாது. அதற்குப் பதிலாக, அவர்கள் முதலில் ஒரு ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு வைத்தியரை (primary-care doctor) நாட வேண்டும். குறித்த வைத்தியர் நோயாளியின் நிலைமையை மதிப்பிட்டு, அவசியமானால் மட்டுமே மேல்மட்ட வைத்தியசாலைகளுக்கு அவர்களைப் பரிந்துரைப்பார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 1,000 புதிய “ஆரோக்ய” (Arogya) நிலையங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளை நாடும் குடும்பங்களுக்கு இந்த நிலையங்களே முதல் தொடர்பு மையமாக (first point of contact) செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோயாளர்கள் தங்களுக்குத் தேவையான சரியான சிகிச்சையை உரிய மட்டத்தில் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவும், பிரதான வைத்தியசாலைகளுக்குத் தேவையற்ற முறையில் நோயாளர்கள் செல்வதைக் குறைத்து அங்கு ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தவும் இந்தப் புதிய முறைமை பெரிதும் உதவும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *