Headlines

நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு: டிசம்பர் 14இல் உத்தரவு

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்த மீளாய்வு மனு தொடர்பில், அறிவித்தல் அனுப்புவதா என்பது குறித்த உத்தரவு டிசம்பர் 14ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது.

தனது பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, நாமல் ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவைப் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *