Headlines

பதும் நிஸ்ஸங்கவுக்கு ஏற்பட்ட காயம்: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அதிரடி விலகல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான பதும் நிஸ்ஸங்க (Pathum Nissanka), பாகிஸ்தானுக்கு எதிரான எதிர்வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடது கால் தொடை தசைப்பிடிப்பு (Hamstring Injury) காயத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாக மீளாத காரணத்தினால், இந்த டெஸ்ட் தொடரில் அவரால் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிலீட்டு வீரராக லஹிரு உதார சேர்ப்பு:

பதும் நிஸ்ஸங்கவுக்குப் பதிலாக அணியில் இடம்பெறும் புதிய வீரராக விக்கெட் கீப்பர்-துடுப்பாட்ட வீரரான லஹிரு உதார (Lahiru Udara) இலங்கைக் கிரிக்கெட் தேர்வுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளார்.

தற்போது ஒருநாள் (ODI) தொடரில் பங்கேற்பதற்காக ஏற்கனவே பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள லஹிரு உதார, அங்கேயே டெஸ்ட் அணியுடனும் இணைந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரரான பதும் நிஸ்ஸங்க காயம் காரணமாக விலகியுள்ளமை இலங்கை அணிக்குப் பலத்த இழப்பாகப் பார்க்கப்பட்டாலும், லஹிரு உதாரவுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு அவரது கிரிக்கெட் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *