Headlines

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! மின்னல் மற்றும் பலத்த காற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களுக்குப் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (03) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையில், சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, செப்டம்பர் 7 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று பகல் 12.09 மணியளவில் மாடம்பே, தோரயாய, தொடகமுவ, ரத்தோட்டை மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *