கொழும்பு: கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (26) பிணை வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேலும் சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட போராட்ட இயக்கத்திற்குப் பங்களிப்புச் செய்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மருத்துவ சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி அனைத்துத் தரப்பினருக்கும் விசேட உரையொன்றை ஆற்றுவார் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
