கொழும்பு: முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான லோஹான் ரத்வத்த தனது 57ஆவது வயதில் இன்று (15) காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அன்னாரது உயிர் பிரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவான இவர், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் கைத்தொழில், வீதி அபிவிருத்தி, மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, சிறைக்கைதிகளைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அவர் தனது சிறைச்சாலைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பதவியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், முன்னாள் அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தவின் புதல்வராவார்.