முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பரவலாக ‘பிள்ளையான்’ என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து தனித்தனி கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இணையவழி ஊடாக ஆஜர்படுத்தப்பட்டமை:
இந்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் சந்தேகநபர் இணையவழி (Online) தொழில்நுட்ப ஊடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது உண்மைகளைக் பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
