பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஏர்பஸ் (Airbus) நிறுவனப் பரிமாற்ற முறைகேடு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராகச் சட்டமா அதிபரால் 24 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகை (Indictment) கொழும்பு நிரந்தர சிறப்பு உயர்நீதிமன்றத்தில் (Permanent Trial-at-Bar) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலைச் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இன்று (அக்டோபர் 27, 2026) கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.
59 சாட்சிகள் பட்டியல் இணைப்பு:
ஏர்பஸ் விமானக் கொள்வனவு மற்றும் அது தொடர்பான நிதிப் பரிமாற்றங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணைப் பொறிமுறையும் (CIABOC) விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருந்தன. இந்நிலையில், இந்த வழக்கில் மொத்தம் 59 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், குறித்த வழக்கின் விசாரணைகள் இனி கொழும்பு நிரந்தர சிறப்பு உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகச் சட்டம் தனது இறுக்கமான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது.
