கொழும்பு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்துப் பேர் கொண்ட குழுவொன்றின் சொந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் ஒன்றுக்காக, 166 இலட்சம் (16.6 மில்லியன்) ரூபாய் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.