Headlines

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு நொவம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக எதிர்வரும் நொவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமன் ஏக்கநாயக்க ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

விசாரணைகளின் தற்போதைய நிலைமை மற்றும் இந்த விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற் கொண்டு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *