கொழும்பு: விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் இன்று (24) உறுதிப்படுத்தியுள்ளன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் விஜேசிங்க, “அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. வயது காரணமாக அவரது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்,” எனக் குறிப்பிட்டார்.
நேற்று (23) சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.