Headlines

வாகனப் பதிவு மற்றும் உரிமையை மாற்ற ஆன்லைன் முறைமை: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) நாராஹேன்பட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான இணையவழி சந்திப்புப் பதிவு (Online appointment) சேவைகள் எதிர்வரும் நவம்பர் 2, 2026 முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாகனப் பதிவு, உரிமையை மாற்றுதல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ளப் பொதுமக்கள் இணையவழியாக முன்கூட்டியே சந்திப்பு நேரங்களை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவையைப் பெற விரும்புபவர்கள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://dmtappointments.dmt.gov.lk/ ஊடாகத் தமது சந்திப்புப் பதிவுகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *