Headlines

விராட் கோலிக்கு ‘சிம்ம சொப்பனம்’… பும்ரா, ஷமி சாதனையை சமன் செய்து ரபாடா மெகா சாதனை!

அகமதாபாத்: கிரிக்கெட் உலகின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி. இவரை வீழ்த்துவது என்பது உலகத்தரம் வாய்ந்த எந்த ஒரு பந்துவீச்சாளருக்கும் எப்போதுமே ஹிமாலய சவால் தான். ஐபிஎல் அரங்கில் எத்தனையோ ஜாம்பவான்கள் வந்தாலும், கோலியின் விக்கெட்டை அவ்வளவு எளிதில் யாரும் பறித்துவிட முடியாது. ஆனால், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளர் மட்டும் கோலிக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு, இந்திய அணியின் தூண்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமியின் மாபெரும் சாதனையைச் சமன் செய்துள்ளார். அந்த அதிவேக புயல் யார், அவர் படைத்த புதிய மைல்கல் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய விறுவிறுப்பான லீக் போட்டி நடைபெற்றது. இதில் குஜராத் அணிக்காகக் களம் கண்ட தென்னாப்பிரிக்காவின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, ஆர்சிபிக்கு எதிராக ஆரம்பம் முதலே அனல் பறக்க பந்துவீசினார். போட்டியின் 4-வது ஓவரில் ரபாடா வீசிய ஒரு துல்லியமான பந்தை எதிர்கொண்ட கோலி, ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆட முயன்ற கோலி, ஆட்டமிழக்கும் முன் 13 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முக்கிய விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரபாடா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை எழுதியுள்ளார்.

வரலாற்று சாதனை:

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலியை 5 முறை ஆட்டமிழக்கச் செய்த முதல் வெளிநாட்டு பந்துவீச்சாளர் என்ற மாபெரும் பெருமையை ரபாடா தற்போது தட்டிச் சென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திய பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மட்டுமே கோலியை தலா 5 முறை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தி வந்தனர். தற்போது அவர்களின் அந்த நீண்டகால சாதனையை ரபாடா சமன் செய்து அசத்தியுள்ளார். ரபாடா இதுவரை கோலிக்கு எதிராக 18 டி20 போட்டிகளில் பந்துவீசி இந்த அபாரமான மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த பட்டியல்:

டி20 போட்டிகளில் கோலியை அதிக முறை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இந்திய அணியின் சந்தீப் சர்மா 7 முறை வீழ்த்தி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஷிஷ் நெஹ்ரா 6 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

வெளிநாட்டு பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, ரபாடாவிற்கு அடுத்தபடியாக மிட்செல் மெக்லெனகன், ஜாக் காலிஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் கோலியை தலா 4 முறை வீழ்த்தியுள்ளனர்.

கோலியின் தனிப்பட்ட சாதனை:

நேற்றைய போட்டியில் ரபாடாவிடம் ஆட்டமிழக்கும் முன், விராட் கோலி ஒரு வரலாற்றுச் சாதனையையும் படைத்தார். இந்திய மண்ணில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 8000 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

டி20 போட்டிகளில் கோலியை அதிக முறை வீழ்த்திய வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்:

பந்துவீச்சாளர்நாடுவிக்கெட்டுகள்
ககிசோ ரபாடாதென்னாப்பிரிக்கா5
மிட்செல் மெக்லெனகன்நியூசிலாந்து4
ஜாக் காலிஸ்தென்னாப்பிரிக்கா4
சுனில் நரைன்வெஸ்ட் இண்டீஸ்4
ஷெல்டன் காட்ட்ரெல்வெஸ்ட் இண்டீஸ்3
ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்ஆஸ்திரேலியா3
இஷ் சோதிநியூசிலாந்து3
மோர்னே மோர்கல்தென்னாப்பிரிக்கா3
ஜேசன் ஹோல்டர்வெஸ்ட் இண்டீஸ்3
ஆடம் ஜம்பாஆஸ்திரேலியா3
சாம் கர்ரன்இங்கிலாந்து3
கிறிஸ் ஜோர்டான்இங்கிலாந்து3
ரஷித் கான்ஆப்கானிஸ்தான்3
ஆண்ட்ரே ரஸல்வெஸ்ட் இண்டீஸ்3
கீரன் பொல்லார்ட்வெஸ்ட் இண்டீஸ்3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *