Headlines

விளக்கமறியலில் உள்ள ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு இன்று கண் பரிசோதனை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ஷவை, கண் பரிசோதனைக்காக இன்று (08) கொழும்பு கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேகன பல்லேத்தன்ன இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது ஷிரந்தி ராஜபக்ஷ சிறைச்சாலையின் பெண் கைதிகள் பிரிவிலுள்ள வைத்தியப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஷிரந்தி ராஜபக்ஷவிடமிருந்து மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தேவையான இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பல மாதிரிகள் நேற்று (07) பெற்றுக்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி:

அரச வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றும் அதனை முறைகேடாகப் பயன்படுத்தியதன் ஊடாகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமை, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த அக்டோபர் 07 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *